படிப்பு தரும் பவுர்ணமி!
ADDED :4127 days ago
ஆடிபவுர்ணமியன்றுகுழந்தைகளுக்காக பெற்றோர் விரதம் அனுஷ்டிக்கலாம். அன்று குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து, காலையும் மதியமும் சாப்பிடாமல் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று, நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனுக்கோ அல்லது கோயில் நுழைவுவாயிலை அடுத்து இருக்கும் சந்திர பகவானுக்கோ வெள்ளை வஸ்திரம் அணிவிக்க வேண்டும். எந்த தெய்வத்தை எண்ணி விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தின் முன்னால் அமர்ந்து மனமுருகி பாட வேண்டும். தெரியாதவர்கள் மற்றவர்கள் பாடுவதைக் கேட்டாலே போதுமானது. இரவில் பழம் அல்லது மிதமான உணவுகளைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இதனால் கல்வி மேம்படும். ஜூலை 31ல் ஆடி பவுர்ணமி வருகிறது. இந்த நாள் ஆடிவெள்ளியாக வருவது சிறப்பு.