கண்நோய் தீர...
ADDED :4127 days ago
மதுராந்தகம் அருகேயுள்ள கிணார் என்னுமிடத்தில் அருள்பாலிப்பவர் நேத்ரபுரீஸ்வரர். சாபத்தால் இந்திரன் உடலில் ஏற்பட்ட கண் அடையாளத்தை நீக்கி, அவருக்கு சாபவிமோசனம் தந்த தலமிது. எனவே இங்கு சிவனுக்கும், நந்தியம்பெருமானுக்குமிடையே தனது ஐராவதம் என்ற வெள்ளை யானை மீது அமர்ந்திருக்கும் இந்திரனையும் காணலாம். கிணாரில் உள்ள நேத்ரபுரீஸ்வரரை தரிசித்தால் கண்நோய்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்!