உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரயிலை தாமதமாக்கிய முருகன்!

ரயிலை தாமதமாக்கிய முருகன்!

பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை இஷ்டதெய்வமாய் வழிபட்டார். ஒருமுறை அவர் காஞ்சிபுரம் சென்றார். எல்லா கோவில்களிலும் சுவாமியைத் தரிசித்த அவர், குமரக்கோட்டம் முருகன் கோவிலுக்கு மட்டும் செல்லாமல் வேறு ஊருக்கு கிளம்பினார்.அப்போது ஒரு சிறுவன் அவரருகே வந்து, ‘குமரகோட்டத்தைத் தரிசிக்கவில்லையா?’ என்று கேட்டான். அவனிடம், ‘அந்தக்கோவில் எங்கிருக்கிறது என எனக்குத் தெரியாதே; ரயிலுக்கும் நேரமாகிறதே!’ என்று பதிலளித்தார் பாம்பன்சுவாமி.‘கோவிலுக்கு சென்று தரிசித்து வரும் வரை ரயில் வராது’ என்று சிறுவன் கூறினான். சிறுவனின் பேச்சை நம்பி அவன் பின்னாலேயே, குமரகோட்டம் முருகன் கோவிலுக்குள் நுழைந்தார் பாம்பன் சுவாமி. அழகன் முருகனைக் கண்ணார தரிசித்தார். தரிசனம் முடிந்ததும் உடன் வந்த சிறுவனைக் காண திரும்பினார். அங்கே அவன் இல்லை. வந்தவன் முருகனே என்று உணர்ந்து மகிழ்ந்தார். பின், ரயில் நிலையம் வந்தார். ரயிலும்  தாமதமாகவே வந்தது.தனக்காக ரயிலையேதாமதமாக வரச் செய்த முருகனின் விளையாடலை எண்ணி வியந்து மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !