உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்!

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்!

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. கடந்த 8ம்தேதி காப்புக்கட்டப்பட்டு ஆடிப்பூரம் உற்சவம் துவங்கியது. காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாளும் ஆண்டாளும் திருவீதி உலா வந்தனர். ஏழாம் திருநாள் காலை மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம், மாலையில் பொற்காசுகளால் சொர்ணாபிஷேகம் நடந்தது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டு,நேற்று காலை 7 மணிக்கு பெருமாளும்,ஆண்டாளும் திருத்தேர் எழுந்தருளினர்.தேரில் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் தரிசனம் துவங்கியது.மாலை 4.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது.இன்று காலை தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !