உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோளக்குடி கோயிலில் கும்பாபிஷேகம்

திருக்கோளக்குடி கோயிலில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர்: திருக்கோளக்குடியில் திருவண்ணாமலை ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த குடவறைக் கோயிலான ஆத்மநாயகி உடனுறை திருக்கோளநாதர் கோயிலில் ஏக காலத்தில் மூன்று தளங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.4 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. பிரதான மூர்த்திகளுக்கு 18,பரிவார தெய்வங்களுக்கு 12 குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை ஆறாம் காலயாகசாலை பூஜை முடிந்த பின்னர் காலை 6.30 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர் கடங்களுடன் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் விமானக்கலசங்கள் உள்பட பரிவார தெய்வங்களின் கோபுரம்,விமானங்களின் நிலைகளுக்குச் சென்றனர்.கலசங்களுக்கு மலர் அணிவித்து,மஞ்சள் சூடினர். காலை 7.15 மணிக்கு, ரத்னகிரி பாலமுருகனடிமை சுவாமி முன்னிலையில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பச்சை வஸ்திரம் வீச, அனைத்து கலசங்களுக்கும் புனித நீரால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோயில் அமைந்திருந்த கோள வடிவிலான பாறைகள் நிறைந்திருந்த மலையில் ஆங்காங்கே நின்று கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !