உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

உடுமலை சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

உடுமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், 257 சிலைகள் நாளை பிரதிஷ்டை செய்யப் படுகின்றன.இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உடுமலை நகராட்சி, ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியம், மடத்துக்குளம் தாலுகா பகுதிகளுக்குட்பட்ட, 336 இடங்களில், நாளை காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இச்சிலைகள், பல்வேறு பகுதிகளில் இருந்து, நேற்று முன்தினம் இரவு முதல் உடுமலைக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளிலும், நாளை காலை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பிலும், பல்வேறு பகுதிகளில், நாளை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இச்சிலைகள் அனைத்தும், செப்., 19ம் தேதி காலை முதல் மாலை வரை, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒவ்வொரு பிரிவாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மடத்துக்குளம் மற்றும் கொழுமம் பகுதிகளில், அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. போலீஸ் பாதுகாப்பு :விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இம்முறை, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு, உடுமலை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, உடுமலை நகரம் மற்றும் புறநகர் பகுதியிலிருக்கும் சிலைகளும், அமராவதி ஆற்றில் விசர்ஜனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில், விசர்ஜன ஊர்வலத்திற்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !