மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுப நிகழ்ச்சி!
பெற்றோரை மதிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
குரு, ராகு மாதம் முழுவதும் நன்மை வழங்குவர். புதன் அக். 26 வரையும், நவ. 13க்கு பிறகும் நன்மை கொடுப்பார். சுக்கிரன் நவ. 2 க்கு பிறகு சாதகமற்ற இடத்துக்கு செல்கிறார். செவ்வாய் நவ. 5ல் இருந்து நன்மை தர உள்ளார். நவ. 5 க்கு பிறகு செவ்வாயால் பணபலம் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதனால் குடும்ப பிரச்னை ஏற்படலாம். நவ.13க்குப் பிறகு கருத்து வேறுபாடு மறைந்து கணவன், மனைவி ஒன்று சேருவர். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அக். 27,28ம் தேதிகளில் எதிர்பாராமல் ஆதாயம் அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். அக். 26 க்கு பிறகு சகபணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். நவ.2 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம். அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காணலாம். நவ. 5 க்கு பிறகு செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை உதவியாக இருக்கும்.
விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர். நிலப்பிரச்னை நவ.5 க்கு பிறகு மறையும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.
பெண்களுக்கு சந்தோஷ வாழ்வு அமையும். தடைபட்ட திருமணம் நடைபெறும்.ஆடை, அணிகலன் வாங்குவர்.
நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 27, 28, 31, நவ.1, 2, 10, 11
கவன நாள்: அக். 18, நவ.12,13,14 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: நீலம், வெள்ளை
பரிகாரம்: தினமும் சூரியனை வழிபடுங்கள். மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.