ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குழந்தை பாக்கியம்!
தனித்தன்மையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன்,சுக்கிரன்,கேது மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். புதன் அக். 26ல் இருந்து நவ. 13 வரை நன்மை தர காத்திருக்கிறார். கடந்த மாதத்தை விட பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மாத பிற்பகுதியில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நவ.13க்கு பிறகு கருத்து வேறுபாடு உருவாகலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறை இருக்காது. பகைவரைத் திறம்பட சமாளித்து வெற்றி கொள்வீர்கள். அக். 29,30ம் தேதிகளில் அதிக லாபம் கிடைக்கும். செவ்வாயால் வீண்பிரச்னைக்கு ஆளானவர்கள், நவ.5க்கு பிறகு விடுபடுவர்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்துஇருந்தவர்கள் அக். 26க்கு பிறகு ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. நவ. 13க்கு பிறகு படிப்படியாக பணிச்சுமை கூடும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
கலைஞர்கள் நற்பலன் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராது உழைக்க வேண்டிஇருக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற லாபம் காணலாம். பசு வளர்ப்பவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். வழக்கு, விவகாரத்தில் நன்மையை எதிர்பார்க்க முடியாது.
பெண்கள் சிறப்பான நிலை பெறுவர். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கி, சுமுக நிலை உண்டாகும். நவ. 3,4 ல் பொன்,பொருள் சேர வாய்ப்புண்டு.
நல்ல நாள்: அக். 18, 23, 24, 25, 26, 29, 30, நவ.3, 4,12,13,14
கவன நாள்: அக்.19, 20, நவ.15,16 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண் : 7,9 நிறம்: பச்சை, செந்துõரம்
பரிகாரம்: துர்க்கை வழியாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு நடத்துங்கள்.