உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) முயற்சியில் வெற்றி!

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) முயற்சியில் வெற்றி!

மனதில் பட்டதை சொல்லும் கடக ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் நற்பலன் உண்டாகும். சுக்கிரன் நவ.2ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் அக். 26 முதல் நவ. 13 வரை நன்மை வழங்குவார். நவ.5 க்கு பிறகு செவ்வாயால் நன்மை உண்டாகும். வாழ்வில் பிரச்னை குறுக்கிட்டாலும், அதை முறியடித்து முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 26 முதல் நவ. 13 வரை ஒற்றுமை சிறக்கும். அதன்பின் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ. 5 க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். எப்போதும் கையில் பணம் புழங்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும்.  நவ. 3,4ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். தொழில் விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம்.

பணியாளர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். அக். 26க்கு பிறகு தடைஅகன்று பதவி உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்களால் உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்குகோரிக்கை எளிதில் நிறைவேறும்.  

கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். நவ. 5க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் நவ. 5க்கு பிறகு கைகூடும். அதன்பிறகு நெல்,சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.

பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி கூடும். அண்டை வீட்டார் நட்புடன் பழகுவர். நவம்பர் 8,9-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும்.

நல்ல நாள்:  அக். 21, 22, 27, 28, 29, 30, நவ. 3, 4, 8, 9

கவன நாள்: அக். 23, 24  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,3                            நிறம்: நீலம், மஞ்சள்

வழிபாடு: ஞாயிறன்று பைரவரை வணங்குங்கள். தினமும் காக்கைக்கு அன்னமிடுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !