சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பதவி உயர்வு!
துணிச்சலுடன் செயலாற்றிடும் சிம்ம ராசி அன்பர்களே!
குரு, சுக்கிரன் ஆகியோர் நன்மையை வாரி வழங்குவர். நவ. 13 க்கு பிறகு புதனாலும் நன்மை உண்டாகும். சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். உடல் நலம் சிறப்படையும்.
தொழில், வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை மேலோங்கும். நவ. 13 க்கு பிறகு, அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும். நவ. 5,6,7 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர் . நவ. 5 க்கு பிறகு நெருப்பு தொடர்பான பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. அக். 29,30ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். அரசு
ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நவ. 2 க்கு பிறகு சமூக மதிப்பு கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். தொண்டர்களின் ஆதரவைப் பெறுவர்.
மாணவர்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. அதிக சிரத்தை எடுத்து படித்தால் வளர்ச்சி பெறலாம். நவ. 13 க்கு பிறகு போட்டியில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டாகும். பசு வளர்ப்பில் அதிக கவனம் தேவை. வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.
பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். அண்டை வீட்டார் நட்பு பாராட்டுவர்.
நல்ல நாள்: அக். 23, 24, 29, 30, 31 நவ. 1, 2, 5, 6, 7, 10, 11
கவன நாள்: அக்.25, 26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 9 நிறம்: வெள்ளை, செந்துõரம்
பரிகாரம்: ராமர் கோவிலுக்கு சென்று வாருங்கள். தினமும் ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள். பசுவுக்குத் தழை போடுங்கள்.