துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!
பணிவுடன் நடந்து கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் கேது, குரு ஆகியோர் நற்பலன் அளிப்பர். சுக்கிரன் நவ. 2 வரையும், செவ்வாய் நவ. 5வரையும் நன்மை தருவர். அபார ஆற்றலுடன் செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் வளர்ச்சி உண்டாகும். அக். 26க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். நவ. 13க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சூரியனால் அலைச்சல் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் கணிசமாக கிடைக்கும். ஆனால் திடீர் விரயமும் உண்டாகலாம். நவ.10,11 ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் கோரிக்கைகளை நவ. 5 க்குள் கேட்டு பெறுவது நல்லது. பணிச்சுமை குறையும். புதனால் திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய நேரிடும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். நவ. 2க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம்.
அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் குருபலத்தால் சீரான வளர்ச்சி காண்பர். புதன் சாதகமற்று இருப்பதால் எதிலும் அலட்சியம் கொள்வது கூடாது.
விவசாயிகளுக்கு நெல், கரும்பு, எள், கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க விரும்பினால், நவ. 5க்குள் முயற்சிப்பது நல்லது. வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரனால் விருந்தினர் வருகை ஏற்படும். நவ. 13க்கு பிறகு பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வது அவசியம். தாய் வீட்டினரின் உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: அக். 19,20,27,28,31, நவ.3,4,5,6,7,10, 11,15,16
கவன நாள்: அக். 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: வெள்ளை சிவப்பு
பரிகாரம்: சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யலாம். தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள். நவ. 2க்கு பிறகு விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.