மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) கையில் பணப்புழக்கம்!
திட்டமிட்டுப் பணியாற்றும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் நவ. 2ல் இடம் மாறினாலும் நன்மையை அளிப்பார். புதன் அக்.26ல் இருந்து சாதக இடத்திற்கு வருகிறார். சூரியன், கேது , சனி மாதம் முழுவதும் நற்பலன் தருவர். எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டுக்குத் தேவை ஆடம்பர முறையில் பூர்த்தியாகும். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் கூடும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்றவை நவ. 5க்கு பிறகு மறையும். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். அக். 21,22-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும். நவம்பர் 13க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அக்டோபர் 26க்கு பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும். நவ. 10,11ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் சிறப்பான நிலை காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் அக்டோபர் 26-ந் தேதிக்கு பிறகு உழைப்புக்கு ஏற்ற வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் அடைவர். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள் மகிழ்ச்சியுன் காணப்படுவர். அக். 26க்கு பிறகு நன்மை மேலோங்கும். அண்டை வீட்டார் நட்பு பாராட்டுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியில் திருப்தி உண்டாகும். வியாபாரம் செய்யும் பெண்கள் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது. ஆடை, அணிகலன் சேரும்.
நல்ல நாள்: அக்.18, 21, 22, 25, 26, நவ.3, 4,10,11,12,13,14
கவன நாள்: நவ. 5,6,7 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: பச்சை, செந்துõரம்
பரிகாரம்: முருகனை வழிபட்டால் நன்மை மேலோங்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுங்கள்.