உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) போட்டியில் வெற்றி!

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) போட்டியில் வெற்றி!

நல்லவர்களோடு பழகும்கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் குரு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார். நவ. 2ல் சுக்கிரன் சாதகமான இடத்திற்கு வருகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கலாம். கையில் பெரும் பணம் புழங்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் கூடும்.  மாதத் தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். சுக்கிரனால் கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். அடிக்கடி விருந்து விழா என சென்று வருவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  

தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நவ. 2க்கு பிறகு மறையும். கடந்த காலத்தில் இருந்த பணவிரயம் நவ.13 க்கு பிறகு இருக்காது. அக். 23,24 ல் அதிர்ஷ்டவசமாக எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.  

பணியாளர்கள் குருபலத்தால், திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர். அக். 26க்கு பிறகு அலைச்சல் ஏற்படும். பணிச்”மையைச் சந்தித்தாலும், அதற்குரிய வருமானம் கிடைக்கும்.  

கலைஞர்களுக்கு நவ.2 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டுக்கு தடையேதும் இருக்காது.

அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ப முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள் அக்.26 க்கு பிறகு நண்பர்களால் தொல்லைக்கு ஆளாகலாம். ஆனால், போட்டி பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் உழைப்புக்கேற்ப வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளிப்போகும்.

பெண்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். மாதத் தொடக்கத்தில் அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.  

நல்ல நாள்: அக்.18, 19, 20, 23, 24, 27, 28, நவ. 5, 6, 7, 12, 13, 14, 15, 16

கவன நாள்: நவ. 8, 9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,9                    நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றி வழிபட மனத்துணிவு உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !