கலைச்செல்விக்கு செம்மறி ஆடு வாகனம்!
ADDED :4038 days ago
புதுடில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பத்தாம் நுõற்றாண்டை சேர்ந்த சரஸ்வதி சிற்பம் உள்ளது. மலர்ந்த தாமரை மலரில் அமர்ந்துள்ள இவளது பின்கரங்களில் அட்சமாலையும், சுவடியும் உள்ளன. முத்துச்சரங்கள் இவளது மேனியை அலங்கரிக்கிறது. இவளது கேசம் கிரீடம் போன்ற அமைப்பில் உள்ளது. வடமாநிலங்களில் சரஸ்வதிக்கு அன்னமே வாகனமாக இருக்கும். ஆனால், இந்த சிற்பத்தின் முன் செம்மறி ஆடு ஒன்று முன்கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் கம்பீரமாக உள்ளது. அன்னையின் திருவடியில் வணங்கிய நிலையில் ஒரு பக்தரின் சிற்பம் உள்ளது. கற்றவர்களும் செம்மறி ஆடு போல, ஒரே பக்கமாக சாயக்கூடாது. யாரும் ஏதேனும் சொன்னால், அதை ஆராய்ந்து உண்மையா என தெளிவுபடுத்திய பிறகு, மேற்கொண்டு எதையும் செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.