கலைவாணி உருவத்தைக் கரைப்பது ஏன்?
ADDED :4038 days ago
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆற்றில் கரைக்கிறார்கள். பொதுவாக, ஆடிப்பெருக்கை ஒட்டி ஓடி வரும் நீரில் மணல் அடித்துச் செல்லப்பட்டு விடும். ஆவணியில், களிமண் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது, மீண்டும் மணல் ஆற்றில் சேரும். அவ்வாறு சேர்ந்த நீரிலுள்ள மாசைக் களைய, மஞ்சளால் செய்யப்பட்ட சரஸ்வதி முகங்களை தண்ணீரில் கரைப்பார்கள். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இயற்கையை பாதுகாக்கவே இவ்வளவு ஏற்பாடும் செய்தனர் முன்னோர்.