கஷ்டங்களை எளிதாக எண்ணுவோம்!
அரபுநாட்டில் இப்னு அப்பாஸ் (ரலி) என்பவர் வசித்தார். தனது தோழர்களின் செயல்பாட்டில் வெறுப்படைந்த அவர் காட்டிற்கு சென்று விட்டார். மனிதர்களை விட, காட்டிலுள்ள மிருகங்களே மேல் என அவற்றுடன் பழகி வந்தார். ஆனால், அங்கு வந்த வெள்ளையர்களின் கண்ணில் இவர் படவே, அவர்கள் இவரை சிறைப்படுத்தி தராபலுஸ் என்ற இடத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கே அகழி வெட்டும் பணியில் இரவு பகலாக ஈடுபடுத்தினர்.இதை விட, தவறு செய்யும் நண்பர்கள் தரும் வேதனையே தேவலாம் என அப்பாஸுக்கு தோன்றியது.இந்நேரத்தில், ஹலபு என்ற ஊரில் இருந்து ஒரு பணக்காரர் வந்தார். அவருக்கு அப்பாஸைத் தெரியும். வெள்ளையர்களிடம் பத்து தினார் பணம் கட்டி, அப்பாஸை விடுவித்தார். தன் ஊருக்கு அழைத்துச் சென்று, அவரை தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். சில நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் தம்பதியர். திடீரென தன் பணக்கார புத்தியைக் காட்டினாள் அந்தப் பெண். எப்போதும் சண்டை. அவள் பேசினாலே, சாட்டையால் அடித்தது போல வார்த்தைகள் வந்தன. குறிப்பாக, நீ என் தந்தையால் பத்து தினார் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட அடிமை தானே! நான் சொல்வதைக் கேள், என்பாள். இப்படி அவஸ்தைப்படுவதற்கு பதிலாக, அகழி வேலையிலேயே இருந்திருக்கலாமோ என நினைத்தார் அப்பாஸ்.நமக்கு வரும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக் கூடாது. ஒரு கஷ்டத்தில் சிக்கியிருக்கும் போது, இன்னொரு பெரிய கஷ்டம் வந்தால், பழைய கஷ்டம் எளிதாகி விடும்.எனவே, எல்லா கஷ்டங்களையும் எளிமையாய் எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்வோம்.