உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி புதிய தகவல்கள்!

சரஸ்வதி புதிய தகவல்கள்!

திருவாரூர் மாவட்டம் கூத்தனுõர் சரஸ்வதி கோவிலில், மலரியைச் சேர்ந்த கவிச்சக்கரவர்த்திகளின் பேரனார் ஆகிய கவிப்பெருமாளான ஓவாதகூத்தர், இவ்வூரிலுள்ள சரஸ்வதி தேவியை எழுந்தருளச் செய்தார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தரையே ஓவாதகூத்தர் என்று சொல்வதாக ஒரு தகவல் உண்டு.கும்பகோணத்தில் இருந்து வேப்பத்துõர், கஞ்சனுõர் வழியாக குத்தாலம் ரோட்டில் 18 கி.மீ., துõரத்தில் உள்ளது திருக்கோடிக்காவல். இந்த ஊரிலுள்ள கோடீஸ்வரர் கோவிலில் உள்ள சரஸ்வதிக்கும், விநாயகருக்கும் தீபம் ஏற்ற ஒரு பக்தர் அந்தக்  காலத்திலேயே 108 கழஞ்சு தங்கத்தை தானமாக அளித்துள்ளார். ஒரு கழஞ்சு என்பது 5.300 கிராம். அதாவது, 572.4 கிராம் தங்கம் கொடுத்துள்ளார்.கலைவாணியின் அருள் பெற்ற வியாசர், மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பதினெட்டு புராணங்களை எழுதினார். இவற்றை அவர் மானா என்ற குகையில் தங்கியிருந்து எழுதினார். அந்தக் குகை புத்தகங்களையும், ஓலைச் சுவடிகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல காட்சியளிக்கும். எனவே, அந்தக் குகைக்கு வியாச புஸ்தக் (வியாச புத்தகம்) என்று பெயர் வைத்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !