ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3644 days ago
உடுமலை: பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. உடுமலை அருகே பூளவாடியில் அமைந்துள்ளது, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில். கோவிலில், நவராத்திரி விழா, அக்., 13ல் துவங்கியது. கோவில் வளாகத்தில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலை, 4:30 மணிக்கு, சக்தி அழைப்பு நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, அம்மன் புறப்பட்டு சந்தைபேட்டைக்கு சென்று, அம்புசேவை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 23ல் இரவு 7:00 மணிக்கு, பொங்கல் பூஜை நடக்கிறது.