கோயில்களில் கொடியேற்றுவதன் நோக்கம் என்ன?
ADDED :4028 days ago
ஒவ்வொரு கோயில்களிலும் திருவிழா தொடங்கும் போது அதன் அடையாளமாக கோயில்க் கம்பத்தில் கொடியேற்றுவது வழக்கம். கொடியே ற்றுவது ஆகம விதிகளில் ஒன்று. கொடிமரம் சிவனையும், கொடிக் கயிறு சக்தியையும், கொடித்துணி ஆன்மாவையும், தர்ப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கிறது. மும்முல வயப்படும் ஆன்மா திருவருட் சக்தியினால் பாசம் அற்று சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் முறையை கொடியேற்றம் நிகழ்ச்சி உணர்த்துகிறது.