ஏகாதசி விரதம் இருக்கும் முறை என்ன?
ADDED :4028 days ago
1. ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதை போற்றுகின்றன. அதனால் ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.
2. அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக்கூடாது. அதனால் அதை முதல்நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
3. அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பி டலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்க கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய ÷ வண்டும். இது முடியாவிட்டால் விஷ்ணு பற்றிய நூல்களை படிக்க வேண்டும்.
4. இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாகும் வீட்டில் செல்வம் பெருகும் சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.