பூர்வ ஜென்ம புண்ணியம் என்பதன் பொருள் என்ன?
ADDED :4024 days ago
நமக்கு பல பிறவிகள் உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் பாவ, புண்ணியங்களைக் கலந்தே செய்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் சேமிப்பது போல, நாம் செய்யும் பாவ, புண்ணியமும் கடவுளின் வங்கியில் சேமிக்கப்படுகிறது. இவையே அடுத்த பிறவியில் நம் வாழ்வின் நடைமுறைக்கு காரணமாக அமைகிறது. வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வெளியூருக்குச் சென்று செலவழிப்பது போல,பாவ புண்ணியத்தின் பலனை எடுத்து வந்து பூமியில் வாழ்கிறோம். நன்றாக வாழ்ந்தால் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும், கஷ்டப்பட்டால் பூர்வ ஜன்ம பாவம் என்றும் சொல்கிறோம். பூர்வ என்பது முற்பிறவியைக் குறிக்கும்.