ஆசைப்புயலில் மனனதை பறி கொடுத்து விடாதே!
மனதை அடக்கி இருந்தாலும், எப்படியோ ஆசைப்புயல் புகுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறித்து விடுகிறது. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்து விடாமல் இருக்க வேண்டுமானால், என்னை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்துõய்மையும் என்ற இவையெல்லாம் நம் மனதுக்குள்ளேயே உள்ளது.விரும்பியதை அடைந்து விட்டால் வரம்பின்றி மகிழக்கூடாது. அதுபோல் துன்பம் வரும்போது ஒரேயடியாக மனம் கலங்கவும் கூடாது. மன உறுதியுடன் தெய்வ நிலையில் நிற்க வேண்டும்.பட்டினியாகக் கிடந்தால் உடல் சக்தியற்று அடங்கிப் போகும். ஆனால், நினைத்ததை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்கவே செய்யாது. கடவுளை நேரடியாகக் காண வேண்டும் என்னும் அளவுக்கு தியானப் பயிற்சி எடுத்தால் தான் இது அடங்கும்.கோபத்தால் நினைவு தடுமாறுகிறது. நினைவு தடுமாறுகையில் புத்தி குழம்புகிறது. புத்தி குழம்பியவன் இறந்தவனுக்கு சமமாகிறான்.பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது.
பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது. சிந்தை கெட்டால் லட்சியம் மறைந்துபோகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான்.தானம் அளிப்பதை கடமையாகக் கருத வேண்டும். இடம், தகுதி, காலம் ஆகியவற்றைக் கவனித்து, திரும்பத் தர இயலாத ஒருவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானத்தை நீங்கள் செய்யுங்கள்.மிகுதியாக உண்பது, சாப்பிடாமலே இருப்பது, அதிகமாக உறங்குவது, மிகுதியாக விழித்திருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பசுவின் பால், அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் கலந்து பரவி உள்ளதென்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் இருக்கிறான். எனினும் தியானம் செய்தால் தான் மனதில் எழுந்தருள்வான்.மவுனமாக இருப்பதே, நல்ல செயல்களைச் செய்வதற்கு சாதகமான சந்தர்ப்பங்களை உண்டுபண்ணக் கூடியதாகும்.மரணமும் பிறப்பும் பெரியதொரு விஷயங்கள் எனக்கருதி குழம்பிப் போக வேண்டாம். மரணம் என்பது, உயிரானது வேறு ஒரு தேகத்தை சென்றடையும் நிகழ்வுதான். உயிருக்கு சாவு என்பது இல்லை.ஆறுகள் தினமும் கடலுக்குள் வந்து பாய்கின்றன. ஆனாலும், கடல்நீர் அதிகரிப்பதும் இல்லை. குறைவதும் இல்லை. அதுபோல், நிலையான மனதுடன் இருப்பவனே பரிபூரண ஞானி.ஐம்பொறிகள் வழியாக ஒருவனது ஆன்மாவுக்குள் ஆசை வெள்ளம் வந்து பாயும் என்றாலும், நிலையான மனம் இருந்து விட்டால் வாழ்வில் அமைதி உண்டாகும்.