உலகில் முதன்முறையாக ஒருநாள் கோடி அர்ச்சனை!
உலக நன்மை கருதி, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுõரி வளாகத்தில் டிசம்பர் 5ல், ஒரே நாளில் ஒரு கோடி அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 1008 விளக்குகளில் ஜோதி ரூபமான ஐயப்பனை ஆவாஹனம் செய்து ஓம் சிவபுத்ராய நமஹ என்ற நாமத்துடன் தொடங்கி கோடி அர்ச்சனை செய்யப்படும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், ஆனந்த வாழ்வும் பெற இந்த அர்ச்சனையில் பங்கேற்கலாம். வைதீக முறைப்படி வேத கோஷங்கள், ஐயப்ப மூல மந்திர ஜபம், ஹோமங்கள், பூர்ணாபிஷேகம், சாஸ்தா பிரீதி சிறப்பு வைபவம் ஆகியவை இந்த அர்ச்சனை நிகழ்ச்சியில் இடம்பெறும். கோடி அர்ச்சனையில் பயன்படுத்தப்படும் 1008 விளக்குகள், முன்பதிவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும். வரும் டிசம்பர் 4ம் தேதி கணபதி ஹோமம், வேதபாராயணம் நடத்தப்படும். 5ம் தேதி ஏகதின கோடி அர்ச்சனை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 7மணி வரை நடக்கும். 6ம் தேதி பூர்ணாபிஷேகம், சாஸ்தா பிரீதி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தினமும் அன்னதானம் உண்டு.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 89391 51215, 89396 51215, 99620 51215 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.