சிறப்புச் செய்திகள் 3!
ADDED :4024 days ago
*கோ என்றால் பசு, குலம் என்றால் கோவில் என்று பொருள். எனவேதான் பசுக்கள் இருக்கும் இடத்தை கோகுலம் என்கிறோம். இதேபோல், குரு என்பவர் தெய்வமாக மதிக்கத்தக்கவர் என்பதால் அவர் இருக்கும் இடத்தை குரு குலம் என்று சொல்கிறோம். *நம என்ற ஒலியோடு முடியும் மந்திரங்கள் எல்லாவளமும் தரும் அருள் நிறைந்தவை. இதனை உச்சரிப்பதால் பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழலாம். எனவேதான், அனைத்து மந்திரங்களிலும் இவ்வார்த்தை உச்சரிக்கப்படுகிறது.
*நாம் சாப்பிட்ட காய், கனிகளின் கொட்டையை வீசி எறிகிறோம். அது மீண்டும் முளைத்து மரமாக வளரும். ஆனால், தேங்காயையும், வாழையையும் சாப்பிட்டு விட்டால் கொட்டாங்கச்சி (சிரட்டை)யும், தோலையும் தவிர எதுவும் மிஞ்சுவதில்லை. இவற்றை வீசி எறிந்தால் முளைப்பதுமில்லை. எனவே தான், பிறப்பற்ற நிலையடைய சுவாமிக்கு தேங்காய், பழம் படைக்கிறோம்.