உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாவளி ரகசியம்!

தீபாவளி ரகசியம்!

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று ஒரு பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும்ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல் எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிக்கு அடையாளமாகதராசினை வைத்திருக்கிறார்கள். நீதியையும், தர்மத்தையும் நிலைநாட்டிய தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.பெற்ற பிள்ளை என்றும் பாராமல், அநியாயம் செய்த தன் மகன் நரகாசுரனை பெற்றோரான திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து நின்று அழித்தனர். இந்த மனஉறுதி ஒவ்வொருமனிதனுக்கும் உண்டாக வேண்டும் என்பதே தீபாவளி நமக்குச் சொல்லும் ரகசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !