கந்த சஷ்டி விரதம் ஏன்?
ADDED :4023 days ago
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி.சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்த இம்மாதிரி சொல்வது வழக்கம். ஆனால், நிஜத்தில் இது கந்தனை குறிக்கும் பழமொழியாகும். வாரியார் சுவாமிகள் இது பற்றி சொல்லும் போது, சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்பார். கர்ப்பமுறாத பெண்கள் சஷ்டியில் பட்டினி விரதமிருந்தால், அறிவியல் அடிப்படையிலும், முருகனின் கருணையினாலும் அகத்துக்குள் (உடல்) இருக்கும் கர்ப்பப்பையில் கரு தங்கி வளரும் என்பது இதன் பொருள்.