உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணம் தாமதமாகிறதா?

திருமணம் தாமதமாகிறதா?

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை தரிசித்தால் திருமணம் தடைப்படும் பெண்களுக்கு விரைவில் திருமணமாகும் என்றும், நல்ல கணவன் கிடைப் பான் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள ஆண்டாள் கோயிலுக்குள் கண்ணாடிக் கிணறு ஒன்று உள்ளது. ஆண்டாள் தன்னை அலங்கரித்துக் கொண்டு  தான் அழகாக இருக்கிறோமோ? என்பதை இந்த கிணற்றில் உள்ள தெளிந்த நீரில் உற்றுப் பார்த்து தெரிந்து கொண்டாள். இப்போது கூட இந்த  கிணற்றை திருமணம் ஆகாத பெண்கள் துளசி மாலையை ஆண்டாளுக்கு சாற்றி அதையே பிரசாதமாக பெற்று தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு  வந்து எட்டிப் பார்க்கிறார்கள். அதன் பிறகு ஆண்டாள் சன்னதிக்கு சென்று வணங்கி, நல்ல வரன் கிடைக்க வேண்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு  வளையல் மற்றும் மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்த நேர்த்திக்கடனை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று செய்தால் திருமணம் ஆகாத  பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !