உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டிற்காக.. சென்னைக்கு வருகிறது காளஹஸ்தி உற்சவர் சிலை!

வழிபாட்டிற்காக.. சென்னைக்கு வருகிறது காளஹஸ்தி உற்சவர் சிலை!

சென்னை: ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோவிலின் உற்சவர் சிலை, வழிபாட்டிற்காக சென்னை எடுத்து வரப்படுகிறது. ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ளது காளஹத்தீஸ்வரர் கோவில்; இது, ராகு, கேது பரிகார ஸ்தலமாகும். உலக நன்மைக்காக, காளஹஸ்தி கோவில் நிர்வாகம், உலக ஆர்ய வைஸ்ய மகாசபா மற்றும் சென்னபுரி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து, காளஹத்தீஸ்வரர் மற்றும் ஞான பிரசன்னம்பிகையின் திருக்கல்யாண வைபவத்தை, சென்னையில், டிச., 14ல் நடத்த உள்ளனர். அதற்காக காளஹத்தீஸ்வரர் மற்றும் ஞான பிரசன்னம்பிகையின் உற்சவர் சிலைகள் சென்னைக்கு எடுத்து வரப்படுகின்றன.இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகலு கூறியதாவது:சிவ, பார்வதி திருக்கல்யாணத்தை நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கண்டு களிக்க வேண்டும். அதற்காக காளஹஸ்தி கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, திருக்கல்யாண வைபவத்தை நாடு முழுவதும் நடத்த உள்ளோம். டிச., 14ல், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக கவர்னர் ரோசையா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !