உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பெரிய ஜீயரின் அனுக்ரஹ பாஷனம்!

திருமலை பெரிய ஜீயரின் அனுக்ரஹ பாஷனம்!

ஸ்ரீயப்பதியான சர்வேஸ்வரன், தர்மத்தை நிலை நாட்ட, தேவகீ பூர்வா ஸந்த்யாம் ஆவீர்பூதம் மஹாத்மநா என்கிறபடி வடமதுரையில், (மதுரா) தேவகி புத்திரனாய் சங்கு சக்கரங்களுடன் அவதரித்தான். பூதண, சகடாசுரன், கம்சன் போன்ற துஷ்டர்களை வதம் செய்ததுடன், நரகாசுரன் போன்ற தீய அரக்கர்களையும் அழித்தார் பரமாத்மா. அக்ரூரர், மாலாகாரர், விதுரர் போன்ற நல்லோர்களை வாழ்வித்தார். தன் பரம பக்தர்களான பாண்டவர்களுக்கு து?துவராகவும், தேரோட்டியாகவும் விளங்கினார். இளம் பிராயத்திலே கோவர்த்தன மலையை, தன் விரல் நுனியில் நிறுத்தி, இந்திரனுடைய கோபத்திலிருந்து ஆயர்களையும், பசுக்களையும் காத்தார் கண்ணபிரான். மேன்மை, நீர்மை, உயிர்களை காக்கும் திறன் முதலான குணங்களை வெளிபடுத்தியிருக்கிறார். நரகாசுரனை வதம் செய்த தினத்தை, தீப ஒளி திருநாளாக கொண்டாடுகிறோம். இந்நல்ல நாளில் தீப விளக்கு(ஒளி) ஏற்றி வழிபட்டு, ஞானசுடரே உன்மேனி என்பதை போற்றுவோம். வேடார் திருவேங்கடம்?மேய விளக்காக, இவ்விருள் தர்ம ஞாலத்தில், அஞ்ஞானத்தை ஒழித்து, ஞானத்தை வழங்கக்கூடிய திரு வேங்கடவனிடத்தில் பக்தி செய்து, எல்லா வளமும், இந்த கடல் சூழந்த மண்ணுலகம் வாழ வேண்டுமாய், ஸ்ரீநிவாசன் மலரடி தொழுது, ஆசீர்வாதமுடன் மங்களாசாசனம் செய்கிறேன். — பெரிய ஜீயர் மடத்தில் அளித்த அனுக்ரஹ பாஷனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !