கார்த்திகை விரதம்!
ADDED :4010 days ago
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப் படுவதாகும். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் தீபத்திருவிழா கொண்டாடப்படும் திருக்கார்த்திகை விரதம் மிக முக்கியமானதாகும். இந்த விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர் என்பர். நாரத மகரிஷி 12ஆண்டுகள் இந்த விரதமிருந்ததால், எல்லா முனிவர்களிலும் மேலான பதவி பெற்றார். இந்த நாளில் முருகனுக்குரிய பாராயண நுõல்களான கந்தசஷ்டி கவசம், சண்முகக் கவசம் படிப்பதும், கந்தபுராணம் கேட்பதும் நல்லது. முருகப் பெருமானின் வரலாற்றை தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் என்னும் நுõலாக இயற்றியுள்ளார்.