உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயிர் தரும் உஜ்ஜயினி மாகாளி!

உயிர் தரும் உஜ்ஜயினி மாகாளி!

உயிரே போகும் நிலையாக இருந்தாலும் சரி...புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி உஜ்ஜயினி மாகாளியம்மனை தரிசித்தால் தீர்க்காயுள் தருபவளாக விளங்குகிறாள். 85 ஆண்டுகளுக்கு முன், இவ்வூரில் காலரா பரவி, பலர் இறந்தனர். செய்வதறியாத மக்கள் ஒருநாள் இரவில், உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு பூஜை செய்து குறைதீர்க்க முறையிட்டனர். அப்போது வண்டிக்கார கருப்பன் என்பவர் மீது அம்பிகை பிரசன்னமானாள் (தோன்றினாள்). கையில் திரிசூலத்துடன் நகர்வலம் வந்த அவர், ஓரிடத்தில் சூலத்தை ஊன்றி, ஊரைப் பாதுகாப்பது என் பொறுப்பு. இனி யாருக்கும் ஊரில் பாதிப்பு உண்டாகாது, என்று மூன்று முறை கூறி சத்தியம் செய்தார். அதன்பின் மக்கள் நோயிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்தனர்.அவர் திரிசூலம் ஊன்றிய இடத்தில் அம்மனுக்கு புதிய கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர். இந்தக் கோவிலில் கடைசியாக, 1991ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது புதிதாக வசந்த மண்டபம், எழுந்தருளல் மண்டபம், பிரகாரம் ஆகியவை கட்டும் திருப்பணி நடக்கிறது. திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அம்மனை வணங்கி வரலாம். திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்துஅறந்தாங்கி வழியாக மணமேல்குடி 60 கி.மீ, அலைபேசி: 99528 95117, 96000 45571.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !