கள்ளக்குறிச்சி கோவிலில் சூரசம்ஹார சஷ்டி வைபவம்
ADDED :3722 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சூரசம்ஹார சஷ்டி வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூலவர் சுவாமிகளுக்கு சிற ப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. இதுபோன்று ஏமப்பேர் விஸ்வநாதர், இந்திலி பாலசுப்ரமணியர், சின்னசேலம் கங்காதீஸ்வரர், விஜயபுரம் செல்வமுருகன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில்களில் சூரசம்ஹார சஷ்டி வைபவம் நடந்தது.