உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோளக்குடியில் கார்த்திகை தீபம்

திருக்கோளக்குடியில் கார்த்திகை தீபம்

திருப்புத்தூர்: திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பவுர்ணமியை முன்னிட்டு,வழக்கம் போல மாலையில் பக்தர்கள் கிரிவலப்பாதையில் வலம் வந்து மலையில் எழுந்தருளியுள்ள திருக்கோளநாதர்-ஆத்மநாயகி அம்பாளை தரிசித்தனர். தொடர்ந்து மூன்றடுக்கில் கோயில் அமைந்துள்ள மலை உச்சியில் குன்றில் கார்த்திகைத் தீபம் ஏற்றப்பட்டு, கிராமத்தினர் பலரும் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !