தேய்பிறை அஷ்டமி பலன்கள்!
வருடம் முழுக்க தமிழ்மாதங்களில் வரும் பன்னிரு தேய்பிறை அஷ்டமிக்கும் மாதத்திற்கு ஒரு பெயர் உள்ளது. தனித்தனி பலன்களும் உண்டு. அந்த நாளில் காலையில் சிவபெருமானையும், மாலை சூரிய அஸ்தமான நேரத்தில் பைரவரையும் தரிசிப்பதும் பின்வரும் பயன்கள் கிடைக்கும்.
1. சித்திரை - சதாசிவ அஷ்டமி - மனக்குழப்பம் தீரும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும்
2 வைகாசி - பகவத அஷ்டமி - கடன் சுமை தீரும்
3. ஆனி - ஜயா அஷ்டமி - கல்வியில் மேன்மை அடையலாம்.
4. ஆடி - நீலகண்ட அஷ்டமி - லட்சுமி கடாட்சம் பெருகும்.
5. ஆவணி - ஸ்தாணு அஷ்டமி - நவகிரகதோஷம் விலகும்.
6. புரட்டாசி - சம்புக அஷ்டமி - ஆயுள் விருத்தி உண்டாகும். பித்ரு தோஷம் விலகும்.
7. ஐப்பசி - ஈஸ்வர அஷ்டமி - சகோதர பகை நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
8. கார்த்திகை - ருத்ர அஷ்டமி - தனவரவு ஏற்பட்டு செல்வம் பெருகும்
9. மார்கழி - சங்கர அஷ்டமி - தொழில் விருத்தி அடையும்.
10. தை - தேவதா அஷ்டமி - மனபயம் விலகும், உயர் பதவி கிடைக்கும்.
11. மாசி - மகேஷ்வர அஷ்டமி - போட்டிகளில் வெற்றி பெறலாம்.
12. பங்குனி - திரியம்பக அஷ்டமி - திருமணத்தடை உள்ளிட்ட தடைகள் யாவும் விலகும்.