உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடத்தில் அய்யப்ப பூஜை

பெண்ணாடத்தில் அய்யப்ப பூஜை

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் 11ம் ஆண்டு சிறப்பு பூஜை நடந்தது.  இதையொட்டி நேற்று காலை 7:00 மணியளவில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து காலை 10:00 மணிக்கு பஜனை, 10:30 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். காலை 11:00 மணிக்கு சிதம்பரம் மவுனசுந்தரமூர்த்தி சுவாமிகளின் சொற்பொழிவு நடந்தது. பகல் 12:30 மணியளவில் அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !