உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியல் வருமானம் ரூ.2.08 கோடி

பழநி கோயில் உண்டியல் வருமானம் ரூ.2.08 கோடி

பழநி:கார்த்திகை மாதம் சபரிமலை சீசனை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உண்டியலில் 27 நாட்களில் ரொக்கம் ரூ. 2 கோடியே 8 லட்சத்து 71 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 780 கிராம், வெள்ளி 7 ஆயிரத்து 250 கிராம், வெளிநாட்டு கரன்சி 768 மற்றும் ரொக்கமாக ரூ. 2 கோடியே 8 லட்சத்து 71 ஆயிரத்து 65 கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !