காரமடையில் நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா!
ADDED :3782 days ago
மேட்டுப்பாளையம்: காரமடையில் நரசிம்ம அவதார அலங்காரத்தில் பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. எட்டு நாட்களுக்கு நடக்கும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், ஒரு அவதார அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா வருவது வழக்கம். மூன்றாம் நாள் இரவு, நரசிம்ம அவதார அலங்காரத்தில் பெருமாள், கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து, இளைப்பாறு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர் மற்றும் பக்தர்கள் பாசுரங்களை சேவித்தனர். சிறப்பு பூஜைக்கு பின், நரசிம்ம அவதார பெருமாள் வெளியே சென்று, திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.