காஞ்சி மகா பெரியவர் 22ம் ஆண்டு ஆராதனை
ADDED :3621 days ago
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின், 68வது பீடாதிபதியாக இருந்த மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்து, 22வது ஆராதனை நினைவு நாள், நேற்று, சங்கர மடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மகா பெரியவர் பிருந்தாவனத்தில் அவரது திரு உருவ சிலைக்கு, அபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரபல சங்கீத வித்வான்களால், பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் பாடப்பட்டது.அதேபோல் தேனம்பாக்கம் மகா சுவாமிகள் தியான மண்டப சிவாஸ்தானத்திலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை கள் நடைபெற்றன. நேற்று இரவு மகா பெரியவர் உற்சவர் சிலை நான்கு ராஜ வீதிகளில் ஊர்வலம் வந்தது.