கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யாக பெருவிழா
ADDED :3714 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா ஸ்நபன யாக (அருளூட்டு யாகம்) பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை,7:30 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாஸனம், பஞ்சகவ்யம், காயத்ரிமந்த்ர ஜபம் உள்ளிட்டசிறப்பு பூஜைகள்நடந்தன. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு மேல் ஸ்நபன மகா யாகம், அன்ன ஆஜ்ய ஸகித ேஹாமம், வேதபாராயணம், பூர்ணாகுஹுதி உள்ளிட்ட பூஜைகளும்; 11:30 மணிக்கு மேல், மகாபிேஷகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நேற்றுமுன்தினம் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.