அக்னிதீர்த்த கரையில் ராமநாதசுவாமி எழுந்தருளல்!
ADDED :3736 days ago
ராமேஸ்வரம்: பொங்கல் பண்டிகையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
காலையில் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு தீர்த்தம் வாரிகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் 4 ரதவீதிகளில் உலா சென்றனர்.