உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேர் திருவிழாவில் உற்சாகம்

பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேர் திருவிழாவில் உற்சாகம்

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழா, கோலாகலமாக நடந்தது. பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் பாண்டவர்களால் வழிபட்ட திருத்தலமாகும். இக்கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு, 9ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், நேற்று, அதிகாலை, 4 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று, பல்லக்கு உற்சவமும், மாலை, 3 மணிக்கு வராஹ புஷ்கரணியில் தீர்த்தவாரி சக்ராஹ்நானமும், இரவு கெஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை முதல், 21ம் தேதி வரை காலை, 10 மணிக்கு திருமஞ்சனமும், மாலை வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் கருட உற்சவம் நடக்கும். விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சாந்தி, தக்கார் சுதாகர், திருத்தேர் ஆலோசனைக் குழு தலைவர் சண்முகம், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !