மதுரை மீனாட்சி அம்மன் தெப்பத் திருவிழாவில் சிறப்பு ஏற்பாடுகள்!
ADDED :3551 days ago
மதுரை: மதுரையில் நாளை நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.டிராவல் கிளப், தானம் அறக்கட்டளை, சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பயணிகள், தியாகராஜர் கல்லுாரிக்கு அழைத்து வரப்படுவர்.இரவு 7.30 மணிக்கு கல்லுாரி மாடியில் இருந்து திருவிழாவை காண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையின் சிறப்புகள் அடங்கிய தகவல்களும் வழங்கப்படும். கிளப் தலைவர் சுந்தர், விழாவில் பங்கேற்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக உள்ளனர். இதற்கான பயணிகள் முன்பதிவு நடக்கிறது, என்றார்.