உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமலை ஜீயர்கள் தரிசனம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமலை ஜீயர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் வந்த திருமலை திருப்பதி பெரியஜீயர் சுவாமிகள் மற்றும் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு ஆண்டாள் கோயில் வந்த ஜீயர் சுவாமிகளை மணவாளமாமுனிகள் ஜீயர் சுவாமி, தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, பத்ரிநாராயணபட்டர், வேதபிரான் சுதர்சன பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் வரவேற்றனர். கொடிமரத்தை வணங்கி, ஆண்டாள் ரெங்கமன்னார் சன்னதியில் மூலவர், உற்சவர்களை தரிசனம் செய்தனர். பின்னர் தங்கவிமானம் மற்றும் வடபத்ரசயனர் சன்னதி, பெரியாழ்வாரை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !