பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டு விழா
ADDED :3543 days ago
சின்னதாராபுரம்: பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், சிறப்பு பூஜை நடந்தது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே அமைந்துள்ள எலவனூரில், பாலதண்டாயுதபாணி கோவில் கடந்தாண்டு புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழாவும் நடந்தது. ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு பூஜை, யாகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அபிஷேகத்தின் போதும், யாகத்தின் போதும் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.