உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது. ஆய்வர் சுபத்ரா, செயல் அலுவலர் கொளஞ்சி மற்றும் கோவில் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் 70 பேர், அபிராமி ஐ.டி.ஐ., மாணவர்கள் 30 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக 12 லட்சத்து 3,746 ரூபாய் பணமும், 28.200 கிராம் தங்கம், 232 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி உண்டியல் காணிக்கையாக 7 லட்சத்து 1,598 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !