வால்பாறை காசிவிஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி
ADDED :3545 days ago
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், மகாசிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
இரவு, 7:00 மணி முதல், 8:30 மணி வரை முதல் காலயாம பூஜையும், இரவு, 11:00 மணி முதல் 12:00 மணி வரை இரண்டாம் காலயாம பூஜையும், நள்ளிரவு, 2:00 மணி முதல் 3:00 மணி வரை மூன்றாம் காலயாம பூஜையும், அதிகாலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை நான்காம் காலயாம பூஜையும் நடக்கிறது. இரவு முழுவதும் சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.