புதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம்
ADDED :3545 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மார்ச் 6ல் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி- திண்டிவனம் சாலை பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான மார்ச் 6ல், மூலவர் ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தனம், மற்றும் மஞ்சள் <உள்ளிட்ட மங்கள திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர், மூலவர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.