உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுக்களை காப்பாற்ற ‘ராஷ்ட்ரீய கோகுல் மிஷன்: திருப்பதி தேவஸ்தானம்

பசுக்களை காப்பாற்ற ‘ராஷ்ட்ரீய கோகுல் மிஷன்: திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: பசுக்களை காப்பாற்ற, ‘ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் என்ற அமைப்பை ஏற்படுத்த, திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அழிந்து  வரும் பசு வகைகளைக் காக்கும் வகையில்,  திருமலை தேவஸ்தானம், சித்துார் அருகில் உள்ள, பலமநேருவில், 450 ஏக்கர் பரப்பளவில், பி ரம்மாண்டமான கோசாலை அமைத்து வருகிறது. இங்கு, ஓங்கோல் இன பசுக்களை பாதுகாக்க, பரிசோதனை கூடம் அமைகிறது. இதற்கு, மத்திய  அரசு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது. இது குறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர், பானுபிரகாஷ்ரெட்டி, கோசாலை அதிகாரி  சீனிவாசலுவும்,  மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை, டில்லியில் சந்தித்து பேசினர்.

வெள்ளி தகடுகள்:  திருப்பதியில், திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கோதண்டராம சுவாமி கோவில் முகப்பு மண்டபத்தில்,  வெள்ளி தகடுகளை பொருத்தும் பணி துவங்கி உள்ளது.  1.40  கோடி ரூபாய்  செலவில், 831 கிலோ வெள்ளியில் இந்த தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை  பொருத்தும் பணி, ஒரு வாரத்தில்  நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !