உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவிலில் பல ஏக்கர் நிலமிருக்குங்க... பராமரிப்புக்கு வழியிருக்கா?

செல்லாண்டியம்மன் கோவிலில் பல ஏக்கர் நிலமிருக்குங்க... பராமரிப்புக்கு வழியிருக்கா?

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள பழமையான செல்லாண்டியம்மன் கோவிலில் தினசரி பூஜை நடத்த  பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் ஜமீன்கள் ஆட்சியில் அம்மன் (பெண் தெய்வங்கள்) வழிபாடு சிறப்புடன் இருந்துள்ளது.  கிராமங்கள் தோறும் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டு அம்மன்கோவில்கள் என்று அழைக்கப்பட்டன. மடத்துக்குளம் பகுதியிலு ள்ள அனைத்து தாய்கிராமங்களிலும் அம்மன்கோவில்கள் உள்ளன. இந்தக்கோவில்களில் ஆண்டு முழுவதும் பூஜை நடக்க பலநுாறு ஏக்கர்  நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.  தலைமுறைகள் மாறிய நிலையில் இந்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் நேரடி சாகுபடியிலிருந்து  மாறி குத்தகைதாரர்கள் மூலம் சாகுபடி செய்யப்பட்டது. இந்த சாகுபடியில் கிடைக்கும் விளைச்சலில் குறிப்பிட்ட பகுதி அறுவடை முடிந்தவுடன் கோவில்களுக்கு குத்தகையாக செலுத்தப்பட்டன. இன்றும் இந்த நடைமுறை உள்ளது. ஆனால், சில கோவில்களுக்கு குத்தகையும் செலுத்துவதில்லை,  நிலமும் திரும்ப ஒப்படைப்பதில்லை. மடத்துக்குளம் அருகேயுள்ள வேடபட்டி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முந் தைய பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமான, 80 ஏக்கர் நிலம் உள்ளது. பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் முறையான பூஜைகள் இன்றி கோவில்  பூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாகவும், சிறப்பு பூஜைகளும் நடந்த கோவில்,  பலஆண்டுகளாக முறையான பூஜைகள் நடத்தப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. கோவிலும் பராமரிப்பின்றி உள்ளது. தினசரி பூஜை நடத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !