உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகபூண்டியில் சித்திரை திருவிழா 12ல் துவக்கம்

நாகபூண்டியில் சித்திரை திருவிழா 12ல் துவக்கம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டி நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, 12ம் தேதி துவங்குகிறது. அன்று காலை கொடியேற்றமும், மாலையில் அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 26ம் தேதி வரை நடைபெறும் விழாவில், சிம்மம், யானை, சேஷ சயனம், ரிஷபம் என பல வாகனங்களில் சுவாமி வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, 18ம் தேதி காலை நடைபெறும்; 19ம் தேதி திருக்கல்யாணமும், 26ம் தேதி கேடய உலாவுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !